- Advertisement -
கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜோஸ்வா இமை போல் காக்க படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
காபி, காதல் என்ற இரண்டையும் திரையில் காட்டி ரசிகர்களை தன் பக்கம் திருப்பிய கல்ட் இயக்குநர் கௌதம் மேனன். காதலை மாறுபட்ட கோணத்தில் திரைக்கு கொண்டு வந்து, ரசிகர்களின் மனதை வெல்லும் திறமை கொண்டவர் கௌதம். மின்னலே படத்தில் தொடங்கிய கௌதமின் திரைப்பயணம் என்றுமே ஏறுமுகம் தான். கௌதம் மேனனின் படங்களுக்கு மட்டுமன்றி, அவரது வசனத்திற்கும், அவரது குரலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இயக்கம் மட்டுமன்றி நடிப்பிலும் கவனம் செலுத்தி, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
