spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிறுவர்களோடு கால்பந்து விளையாடி அசத்திய அஜித்குமார்

சிறுவர்களோடு கால்பந்து விளையாடி அசத்திய அஜித்குமார்

-

- Advertisement -
தனது மகனின் நண்பர்களோடு நடிகர் அஜித்குமார், கால்பந்து விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கோலிவுட் ரசிகர்களால் தல என்றும் ஏகே என்றும் அன்புடன் அழைக்கப்படும் முன்னணி நடிகர் அஜித்குமார். ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வந்த அஜித்குமார், தற்போது சினிமாவை தாண்டி சுற்றுலாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு உலக சுற்றுலா செல்வதற்கான பைக் நிறுவனத்தையும் அவர் தொடங்கினார். இதைத் தொடர்ந்து பைக்கை எடுத்துக் கொண்டு உலகம் முழுவதும் உலா வந்து கொண்டிருந்தார்.

we-r-hiring
தற்போது, அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கேயே நிறைவு செய்ய படக்குழு பணியாற்றி வருகிறது. படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இதனிடையே அஜித்குமார் தனது குடும்பத்தினருடனும் அவ்வப்போது நேரம் செலவிட்டு வருகிறார். அண்மையில் மகளின் பிறந்தநாளை துபாயில் கொண்டாடினார். இந்நிலையில், தனது மகன் ஆத்விக்கின் நண்பர்களுடன் அஜித், கால்பாந்து விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

MUST READ