spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது

அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது

-

- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய திரையுலகின் இசை எனும் சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியாத தூணாக இருந்தவர் லதா மங்கேஷ்கர். பாலிவுட் மற்றும் பிற மொழிகளில் ஆயிரக்கணக்கில் பாடல்களை பாடியிருக்கும் லதாவிற்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். பாரத ரத்னா விருது பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் நினைவாக அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும், லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி வருகிறார்கள். நடப்பு ஆண்டுக்கான விருது விழாவும் கோலாகலமாக நடைபெற்றது.

we-r-hiring
இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பத்மினி கோலாபுரி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விருதை பெற்றுக் கொண்ட அமிதாப் பச்சன், கேட்போரின் ஆன்மாவை கரையச் செய்யும் பாடகரின் நினைவாக இந்த விருதை பெறுவது அதிர்ஷ்டம் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், இதுகுறித்து பேசிய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இப்படிப்பட்ட பெருமை எனக்கு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி என்றார்.

MUST READ