Homeசெய்திகள்சினிமாகோலிவுட்டின் மிரட்டலான வில்லன் மகளுக்கு கோலாகல திருமணம்.... புகைப்படங்கள் மீண்டும் வைரல்... கோலிவுட்டின் மிரட்டலான வில்லன் மகளுக்கு கோலாகல திருமணம்…. புகைப்படங்கள் மீண்டும் வைரல்…
- Advertisement -

அடங்கொப்பன் தாமர பரணியில தலமுழுங்க… இந்த வசனத்தை கேட்காத 90ஸ் கிட்ஸ் யாருமே இருக்க மாட்டார்கள். 90-களில் கோலிவுட்டையே கட்டி ஆண்ட வில்லன் நடிகர் ஆனந்த ராஜ். அவரது தோற்றத்திலும், முகத்தில் அவர் வைக்கும் மருகிற்கும் பயப்படாத ரசிகர்கள் இல்லை. அவரது நடிப்பும், வசனங்களும், திரையரங்கு சென்ற அனைத்து ரசிகர்களையும் மிரட்டி எடுத்தது. சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார்.

புதுவையில் பிறந்து வளர்ந்த அவருக்கு போலீஸ் வேலை கிடைத்தும், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமா துறையை தேர்வு செய்தார். தாய் மேல் ஆணை, ஜீவா, என் தங்கச்சி படிச்சவ, ராம்கி, செந்தூரப்பூவே ஆகிய படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார். அர்ஜூன் நடித்த ஏழுமலை படத்தில் அவர் சொல்லும் அடங்கொப்பன் தாமர பரணியில தலமுழுங்க வசனம், அவரது அடையாளமாகவே மாறிப்போனது. தற்போது அவர் வில்லன் வேடங்களில் இல்லாமல், குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில், ஆனந்த ராஜின் மகள் சஞ்சனாவுக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. சென்னையில் விரிஞ்சி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகின்றன.