- Advertisement -
நடிகர் விஜய்க்கு வாக்களிப்பது குறித்து வெளிப்படையாக பேச முடியாது என நடிகர் அர்ஜூன் தாஸ் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் நடிப்புக்கும் தோற்றத்திற்கும் பலர் பெயர் போனது உண்டு. அந்த வகையில் குரலுக்கு பெயர் போன ஒரே நடிகர் அர்ஜூன் தாஸ். அவரது நடிப்பை ஒரு தரப்பினர் ரசித்தால், அவரது கர்ஜிக்கும் குரலுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். லைஃப்டைம் செட்டில்மெண்ட் என்ற வசனத்தின் மூலம் பிரபலம் அடைந்தார் அர்ஜூன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். வில்லனாக நடித்த அவர், தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து, அந்தகாரம் படத்தில் நாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.
