- Advertisement -
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டனின் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பரத் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான, முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல, குஷ்பு, நலினி ஆகியோரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் உடல் சென்னை அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.


தொடர்ந்து, இவரது உடல் மதியம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பிரபல கோலிவுட் நடிகர்கள் பரத் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த் “நான் உயிருக்கு போராடிட்டு இருந்த அப்போ கேப்டன் சொன்ன அந்த வார்த்தைதான் இன்னமும் மனதில் ஓடிட்டு இருக்கு!” என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் பரத்தும் விஜயகாந்த் உடலை பார்த்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.



