spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் வில்லனாக நடிக்கும் நடிகர் பரத்.... வெளியான புதிய தகவல்!

மீண்டும் வில்லனாக நடிக்கும் நடிகர் பரத்…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -

நடிகர் பரத், சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். மீண்டும் வில்லனாக நடிக்கும் நடிகர் பரத்.... வெளியான புதிய தகவல்!அதைத்தொடர்ந்து இவர் நடித்திருந்த காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பின்னர் வெயில், கூடல் நகர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடைசியாக லவ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இந்நிலையில் அடுத்ததாக வில்லனாக களமிறங்க இருக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.மீண்டும் வில்லனாக நடிக்கும் நடிகர் பரத்.... வெளியான புதிய தகவல்!

அதாவது, கொம்பன், தேவராட்டம், குட்டி புலி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் எம் முத்தையா. இவர் கடைசியாக ஆர்யா நடிப்பில் காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் முத்தையாவிற்கு தோல்வி படமாக அமைந்ததால் அடுத்ததாக தனது மகன் விஜயை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. புதுமுக நடிகர்கள் நடிக்கும் இந்த படம் ஆக்ஷன் கலந்த கதைகளத்தில் உருவாகி வருகிறது. இந்நிலையில்தான் இந்தப் படத்தில் நடிகர் பரத் நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

we-r-hiring

ஏற்கனவே நடிகர் பரத் செல்லமே, கடுகு போன்ற படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ