spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருப்பதிக்கு நடந்து சென்று நடிகை தீபிகா படுகோன் சாமி தரிசனம்

திருப்பதிக்கு நடந்து சென்று நடிகை தீபிகா படுகோன் சாமி தரிசனம்

-

- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ரித்திக் ரோஷனுடன் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில் தீபிகா படுகோன் தனது தங்கை அனுஷா படுகோனுடன் சேர்ந்து திருப்பதி சென்றார். அலிபிரி நடைபாதை அருகே தனது காரில் வந்த தீபிகா படுகோன், திடீரென காரிலிருந்து இறங்கினார். பின்னர் தனது தங்கையுடன் நடைபாதையில் நடந்து சென்றார். தீபிகா படுகோன் நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நடைபாதையில் சென்ற பக்தர்கள் தீபிகா படுகோனுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
we-r-hiring

இதையடுத்து போலீசார் மற்றும் விஜிலென்ஸ் போலீசார் தீபிகா படுகோனை பலத்த பாதுகாப்புடன் திருப்பதி மலைக்கு அழைத்து வந்தனர். மலைப்பாதையில் உள்ள கோவில்களில் கற்பூரம் ஏற்றி அவர் சாமி தரிசனம் செய்தார். 3 மணி நேரம் நடந்து திருப்பதி மலையை அடைந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இரவு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். இதைத் தொடர்ந்து இன்று காலை அவர் அம்மா, தங்கை, அப்பா என குடும்பத்தினருடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.

MUST READ