- Advertisement -
ப்ரதர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி வைரலாகி வருகின்றன.
ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வௌியாகின. பொன்னியின் செல்வனாக ஜெயம்ரவியின் தோற்றம் மற்றும் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. அவரது திரைப் பயணத்தில் பொன்னியின் செல்வன் மைல் கல்லாக அமைந்தது. இதைத் தொடர்ந்து நயன்தாராவுடன் ஜெயம்ரவி இணைந்து நடித்த இறைவன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றன. இதைத் தொடர்ந்து சைரன் என்ற திரைப்படத்தில் கமிட்டாகி அவர் நடித்துள்ளார்.
