Homeசெய்திகள்சினிமாடும்.... டும்... டும்... சிறப்பாக நடந்து முடிந்தது நடிகர் கவினின் திருமணம்!

டும்…. டும்… டும்… சிறப்பாக நடந்து முடிந்தது நடிகர் கவினின் திருமணம்!

-

நடிகர் கவினின் திருமணம் என்று சிறப்பாக நடந்து முடிந்தது.

சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவின். அதன் பின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதற்கிடையில் சிறு சிறு கதாபாத்திரங்களில் வெள்ளி திரையில் நடித்து வந்த கவின் கடந்த 2019ல் வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து லிப்ட், டாடா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். குறிப்பாக டாடா திரைப்படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கவினுக்கும் அவரின் நீண்ட நாள் தோழி மோனிகா டேவிட்டுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது. அதன்படி கவின் மோனிகா டேவிட் இருவரின் திருமணம் சென்னையில் உள்ள பார்க் ஹயாத் ஹோட்டலில் இன்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்திற்கு நடிகர்கள் பலரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தம்பதியனர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ