Homeசெய்திகள்சினிமாஏமாற்றிய காதலன்... நடிகை நிவேதா பெத்துராஜ் வேதனை...

ஏமாற்றிய காதலன்… நடிகை நிவேதா பெத்துராஜ் வேதனை…

-

- Advertisement -
 கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். இவர், தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் அட்டக்கத்தி தினேஷூக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக், உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக எம்மனசு தங்கம், ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அலவைக்குந்தபுரமுலோ திரைப்படத்தில் நிவேதா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிவேதா, அண்மையில் பருவு என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில் தான் எதிர்மறையாக சிந்தித்தால் அது அப்படியே நடந்து விடும் என தெரித்தார். மேலும், தனது காதலர் தன்னை ஏமாற்றி விடுவான் என்று நினைத்தேன், அது உடனடியாக நடந்துவிட்டது, அவர் தன்னை ஏமாற்றி விட்டான் எனவும் நிவேதா வேதனை தெரிவித்துள்ளார்.

MUST READ