spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் மாதம் திருமணம்... திருமண அழைப்பிதழ் வைரல்...

நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் மாதம் திருமணம்… திருமண அழைப்பிதழ் வைரல்…

-

- Advertisement -
நடிகர் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிள் நட்சத்திரமாக இருந்து வருபவர் பிரேம்ஜி அமரன். கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் தம்பியுமான இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நிச்சயம் இடம்பெற்றிருப்பார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திலும், பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

we-r-hiring
இவருக்கு எப்போது திருமணம் என தொடர்ந்து பல கேள்விகள் எழுந்தபோதிலும், மௌனம் காத்து வந்தார். ஆனால், திடீரென அண்மையில் நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக புத்தாண்டு அன்று அதிரடியாக ஒரு அறிவிப்பை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது உண்மையாக இவர் கூறியதா இல்லை படத்தின் விளம்பரத்திற்காகவே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், மீண்டும் பிரேம்ஜியின் திருமணம் குறித்த புதிய செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி, பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இந்து என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், வரும் ஜூன் மாதம் 9-ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் பிரேம்ஜி தரப்பில் வெளியாகவில்லை.

MUST READ