Homeசெய்திகள்சினிமாகோல்டு படத்தின் தோல்விக்கு காரணம் இதுதான்: நடிகர் பிருத்விராஜ் விளக்கம்

கோல்டு படத்தின் தோல்விக்கு காரணம் இதுதான்: நடிகர் பிருத்விராஜ் விளக்கம்

-

நேரம் திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு இயக்குநாரக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். இப்படத்தில் நிவின்பாலி மற்றும் நஸ்ரியா நாசிம் ஆகியோர் நடித்திருந்தனர். அவர் இயக்கிய மலையாள படமான பிரேமம் கேரளா மட்டுமன்றி தமிழிலும் பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய பிரேமம் திரைப்படம் பல லட்சம் ரூபாய் வசூலில் பட்டையை கிளப்பியது. மேலும், நிவின்பாலியின் திரையுலகில் பிரேமம் திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் மூலம் தான் சாய்பல்லவியும் நாயகியாக அறிமுகமானார்.

 

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய திரைப்படம் கோல்டு. இப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 1ஆம் நாள் திரையரங்கில் வெளியானது.

கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கின. இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின்முகநூல் பதிவும் வைரலானதும் பின்னர் அவர் அதை நீக்கியதும்குறிப்பிட்டத்தக்கது. சலார் நிகழ்ச்சியில் பேசிய பிருத்விராஜ், கோல்டு படத்தின் தோல்விக்கு காரணம், அது மக்களிடம் கனெக்ட் ஆகாமல் இருந்தது தான். நன்றாக வசூலித்த படங்கள் அனைத்தும் மக்களிடம் கணெக்ட் ஆகியிருக்கும் என தெரிவித்தார்.

MUST READ