- Advertisement -
பாலிவுட்டில் முன்னணி நடிகர் நடிகையாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட். பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் இவர்கள். அலியா பட், நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டின் பிரபலமான கபூர் குடும்பத்திற்கு திருமணமாகிச் சென்ற அலியா, கடந்த ஆண்டு இறுதியிலேயே தாயானார்.
பெண் குழந்தைக்கு தாயான அலியா பட், தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். 2021ஆம் ஆண்டு வெளியான ‘கங்குபாய் கத்தியாவாடி’ படத்திற்காக தன் முதல் தேசிய விருதை அவர் பெற்றார். குடும்பம் , வாழ்க்கை என இரண்டிலும் வெற்றிகரமாக வலம் வரும் அலியா பட், சினிமா வாழ்வில் கடுமையாக ட்ரோல்களை சம்பாதித்த நிலையில், தற்போது பலருக்கு இன்ஸ்பிரேஷனாக பார்க்கப்பட்டு வருகிறார். கிறிஸ்துமஸ் விருந்தையொட்டி, ரன்பீர் கபூரும், அவரது மனைவி அலியா பட்டும் மகள் ராஹாவை அழைத்து வரும் புகைப்படம் இந்தி திரையுலக ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
#RanbirKapoor spotted with his little bundle of joy, #Raha exiting from #Jeh’s birthday party 😍
Did you notice the adorable father-daughter duo twinning? We’re just so in love 🥺❤️ pic.twitter.com/0vzFXa2sIL— Pinkvilla (@pinkvilla) February 21, 2024