கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் ரவி, ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஆரவ், அயான் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். ரவி – ஆர்த்தி இருவரும் கிட்டதட்ட 15 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த விவாகரத்துக்கு பாடகி கெனிஷா தான் காரணம் என பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. அதன்படி நடிகர் ரவியும், ஐசரி கணேஷ் வீட்டு திருமண நிகழ்வில் கெனிஷாவுடன் கைகோர்த்து வந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட, ரவியும், கெனிஷா தான் என் வாழ்க்கையின் அழகான துணை, என் வாழ்வில் வெளிச்சம் தந்தவர் என்பது போன்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தவிர ஆர்த்தியையும், அவருடைய தாயார் சுஜாதா விஜயகுமாரையும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் நேற்று (மே 20) ரவியின் மனைவி ஆர்த்தி, புதிய அறிக்கையை வெளியிட்டு எங்களுடைய திருமண வாழ்வு இந்த நிலைமைக்கு வர அந்த மூன்றாவது நபர் தான் காரணம் என மறைமுகமாக கெனிஷாவின் பெயரை குறிப்பிடாமல், சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
இதற்கிடையில் ரவி – ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ரவியையும், ஆர்த்தியும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடச் சொன்னார்கள். ஆனால் அதில் இருவருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் மீண்டும் இந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ரவி -ஆர்த்தி இருவரும் தனித்தனியே கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது ஆர்த்தியின் தரப்பில், தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க ரவிக்கு உத்தரவிட வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ரவி இதற்கு பதில் அளிக்க வேண்டும் என வருகின்ற ஜூன் 12ஆம் தேதி விசாரணையை ஒத்திவைத்தார்.
- Advertisement -