- Advertisement -
பாலா இயக்கத்தில் நடித்த ஒவ்வொரு நடிகருக்கும் அது திருப்பு முனையாக அமைந்திருக்கும். பாலா தற்போது இயக்கி வரும் திரைப்படம் வணங்கான். இதில் முன்னாக சூர்யாவும், நடிகை கிருத்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகினார். ஆனால், பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சூர்யா படத்திலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டியும் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து, சூர்யாவுக்கு மாற்றாக அருண் விஜய்யும், க்ரித்தி ஷெட்டிக்கு மாற்றாக ரோஷினி பிரகாஷூம் நடித்துள்ளனர்.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குமரியில் தொடங்கி, பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து முடிந்தது. இதனிடையே, படத்தில் முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட மலையாள நடிகை மமிதாவும் படத்திலிருந்து விலகியதாக பெரும் சர்ச்சை எழுந்தது.




