Homeசெய்திகள்சினிமாஜிபி முத்து ஒரு ஆம்பளை சன்னி லியோன் – நடிகர் சதீஷ்

ஜிபி முத்து ஒரு ஆம்பளை சன்னி லியோன் – நடிகர் சதீஷ்

-

நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் செய்தியாளர் சாந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன், தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் , ஜிபி முத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜிபி முத்து, “இந்த படத்தில் தான் நான் முதன்முறையாக நடித்துள்ளேன்.படத்தில் நான் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் நிறைய கிளுகிளுப்பான காட்சிகள் உள்ளது” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய நடிகை தர்ஷா குப்தா, “வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணிவிட வேண்டும் என்பது எனது கனவு, போன வருடம் ருத்ரதாண்டவம் படம் வந்துச்சு, இந்த வருடம் ஓ மை கோஸ்ட் திரைப்படம் வர உள்ளது.படம் மிகவும் நன்றாக வந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து நடிகர் சதீஷ் பேசுகையில், “முதலில் இந்த படத்தில் சன்னி லியோன் மட்டுமோ ஹீரோ, ஹீரோயின் எல்லாம். நாங்கள் அந்த படத்தில் ஒரு நல்ல படியான அங்கம் மட்டுமே.ஜிபி முத்து ஒரு சின்ன நல்ல கதாபாத்திரம் பணியிருக்கிறார். இருந்தாலும் இந்த 3 நாட்களில் எங்களுடன் எல்லா புரொமோஷன்களுக்கும் வருகிறார். ஜிபி முத்து அவர்களின் எல்லா கதைகளையும் கேட்டேன். அவர்களுக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர் ஒரு ஆம்பளை சன்னி லியோன். அவர் விரைவில் ஒரு கட்சி தொடங்க உள்ளார், அதற்கு வாழ்த்துக்கள்” என்றார்.

இதைதொடர்ந்து பேசிய நடிகை சன்னி லியோன், “வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி, உங்கள் தமிழ் என் ஆங்கிலம் இரண்டும் நன்றாக மேட்ச் ஆனது. படம் நன்றாக உள்ளது. அனைவரும் கண்டிப்பாக பாருங்கள்” எனக் கூறினார்.

MUST READ