- Advertisement -
திறமையை நிரூபிக்க ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் போராடி வருவதாக, நடிகர் சாந்தனு பாக்யராஜ் உருக்கமாக பேசியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு. இவர் கோலிவுட்டின் முன்னணி இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன் ஆவார். குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமான அவர், 2008-ம் ஆண்டு வெளியான சக்கரக்கட்டி படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகைகளின் கவனத்தை ஈர்த்தார் சாந்தனு பாக்யராஜ். தொடர்ந்து, சித்து பிளஸ்டூ, கண்டேன், ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி, கதை திரைக்கதை வசனம், வாய்மை ஆகிய திரைப்படங்களில் சாந்தனு நடித்தார்.
