Homeசெய்திகள்சினிமாநடிகர் சிம்பு வீட்டில் விசேஷம்... ரசிகர்கள் வாழ்த்து....

நடிகர் சிம்பு வீட்டில் விசேஷம்… ரசிகர்கள் வாழ்த்து….

-

நடிகர் சிலம்பரசன் வீட்டில் நடந்திருக்கும் நல்ல செய்திக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட்டின் லிட்டல் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுவர் நடிகர் சிம்பு. சுட்டிச்சிறுவனாக சினிமாவில் தடம் பதித்த சிம்பு, இன்று சினிமா வித்தகனாக உயர்ந்து நிற்கிறார். அப்பாவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சிம்பு இன்று வரை கோலிவுட்டில் தனக்கான இடத்தை ஏற்படுத்தி இருக்கிறார். நடிப்பு, நடனம், பாடல் என பன்முகத்திறமை கொண்ட சிம்புவுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, உடல் எடை பருமன் என பல விமர்சனங்களையும், சிக்கல்களையும் சந்தித்த நடிகர் சிம்பு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டு தற்போது சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார்.

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த சிம்பு தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதனிடையே சிம்பு வீட்டில் புதிய விஷேசம் நடந்துள்ளது. நடிகர் சிம்புவுக்கு குறளரசன் என்ற தம்பியும், இலக்கியா என்ற சகோதரியும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதில் இலக்கியாவின் மகளுடன் சிம்பு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது சிம்புவின் தம்பி குறளரசனுக்கு குழந்தை பிறந்துள்ளது. இவருக்கும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த நபீலா என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் முடிந்தது. தற்போது பெற்றோர் ஆகியிருக்கும் சிம்புவின் தம்பிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ