ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 49-வது படமான ‘எஸ்டிஆர் – 49’ படத்திற்கான இசை பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிலம்பரசன் தற்போது பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள “தக் லைப்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து, நடிகர் சிம்பு ‘பார்க்கிங்’ திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படமான ‘எஸ்டிஆர் – 49’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சாய் பல்லவி, சந்தானம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையக்கவுள்ளார்.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டையொட்டி நடிகர் சிம்பு ‘எஸ்டிஆர் – 49’ படத்தின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நடிகர் சிம்பு, ‘எஸ்டிஆர் – 49’ படத்திற்கான இசை பணிகளை இன்று முதல் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.