spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்டமாக புதிய வீடியோ வெளியிட்ட சிம்பு... குழம்பிப்போன ரசிகர்கள்...

பிரம்மாண்டமாக புதிய வீடியோ வெளியிட்ட சிம்பு… குழம்பிப்போன ரசிகர்கள்…

-

- Advertisement -
பிரபல நடிகர் சிம்பு வெளியிட்ட புதிய வீடியோவால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

கோலிவுட்டின் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு. சுட்டியாக அறிமுகமான நாள் முதல், நாயகனாக வெளுத்து வாங்கும் இன்று வரை சிம்புவுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தந்தையின் படத்தில் குழந்தையாக நடித்து சினிமாவிக்கு அறிமுகமான சிம்பு, இன்று கோலிவுட்டி முக்கிய முகமாக மாறியிருக்கிறார். காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடித்து அவர் நாயகனாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே மக்கள் மனதில் முத்திரை பதித்த சிம்பு அடுத்தடுத்து காதல், காமெடி, கமர்ஷியல், ஆக்‌ஷன் என பல பரிமாணங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக சிம்பு நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. தொடர்ந்து பல விமர்சனங்களுக்கும் ஆளாகினார் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இத்திரைப்படம் சிம்பு நடிக்கும் 48-வது படமாகும்.
we-r-hiring

அண்மையில் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டு உள்ளது. இது, சிம்பு நடிக்கும் 48-வது படத்தின் வீடியோ என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது அத்திரைப்படம் இல்லை என்றும், வேறு ஏதோ படத்தின் அறிவிப்பு என்றும் மாறி மாறி ரசிகர்கள் கமெண்ட் செய்து குழப்பத்தில் உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சிம்பு கூறியிருக்கிறார்.

MUST READ