Homeசெய்திகள்சினிமாகான்கள் குடியிருக்கும் பகுதியில் சொகுசு பங்களா வாங்கிய பிரபல நடிகை

கான்கள் குடியிருக்கும் பகுதியில் சொகுசு பங்களா வாங்கிய பிரபல நடிகை

-

- Advertisement -
kadalkanni
பாலிவுட்டில் கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் வௌியான திரைப்படம் அனிமல். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, திரிப்தி திம்ரி மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, திருப்தியின் கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவியத் தொடங்கி இருக்கின்றன.

இவர் இதற்கு முன்பாக, புல்புல் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. தற்போது பாலிவுட்டில் ஒரே நேரத்தில் 4 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் ஒன்று, தமிழில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படத்தில் நாயகியாக திருப்தி நடித்து வருகிறார். மேலும், அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் ஒரு பட பாடலுக்கு நடனமாட திருப்தியை படக்குழு அனுகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை திருப்தி டிம்பி மும்பையில் பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறார். சொந்த வீடு வாங்குவதை லட்சியமாகக் கொண்ட அவர், மும்பையில் சல்மான்கான், ரன்பீர் கபூர், ஷாருக்கான் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் தங்கி இருக்கும் பாந்த்ரா பகுதியில் புதிய பங்களா வாங்கி இருக்கிறார். இது தற்போது பேசு பொருளாகி உள்ளது.

MUST READ