- Advertisement -
வெற்றி நடிப்பில் உருவாகும் ஆண்மகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் மாபெரும் பொருட்செலவில் எடுக்கும் திரைப்படங்களே சில சமயங்களில் தோல்வியை தழுவும் நிலையில், பல நேரங்களில் சிறு பட்ஜெட் படங்கள் எதிர்பாராத வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளன. அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் வெற்றி. எட்டு தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் வெற்றி. இவர் தற்போது ஆண்மகன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.


அதில் வெற்றியின் தந்தையாக பிரபு நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ண பிரியா இத்திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் திரைப்படத்தில் மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வசந்த் சாய், நந்தா பெரியசாமி, ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மகா கந்தன் இயக்குகிறார்.



