Homeசெய்திகள்சினிமாமனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!

மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!

-

- Advertisement -

நடிகர் விஜய், மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!

இளையராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே மனோஜ் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு பாதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் தான் மீண்டும் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட திடீரென உயிரிழந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரை பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய உடல் அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!இன்று (மார்ச் 26) மாலை 4:30 மணியளவில் பெசன்ட் நகரில் மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு கார்த்தி, சூர்யா, சிவகுமார், வைரமுத்து போன்றோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மனோஜ் பாரதிராஜா கடந்த 1999 இல் வெளியான தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தையும் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ