- Advertisement -
தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் விஜய். இளைய தளபதி, தளபதி என தன் நடிப்பால் அடுத்தடுத்து படிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தமிழ் மொழியையும், தமிழ் ரசிகர்களையும் மட்டுமே குறிவைத்து அடுத்தடுத்துபல ஹிட் படங்களை கொடுக்கும் கோலிவுட்டின் உச்ச நடிகர் விஜய். அவர் எடுக்கும் ஒவ்வொரு செல்பிக்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். விஜய் தனது போனை எடுத்து செல்பிக்கு நீட்டினால் போதும் அனைத்து ரசிகர்களும் கூச்சலிடத் தொடங்கி விடுவர்.
அந்த வகையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பின்போது, படப்பிடிப்புத் தளத்தில் கூடிய ரசிகர்களை அவர் நேரில் கண்டு ரசித்தார். மேலும், கேரவன் வண்டியின்மீது ஏறி நின்று சுமார் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த செல்பி பல லட்சம் லைக்குகளை பெற்று வைரல் ஆனது. அனைத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்ட் ஆனது. இதைத் தொடர்ந்து வாரிசு பட இசை வெளியீட்டு விழாவிலும் செல்பி எடுத்தார்.
— Vijay Fans Trends (@VijayFansTrends) January 10, 2024