spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடனம் என்றால் எனக்கு பயம் - விஜய் சேதுபதி

நடனம் என்றால் எனக்கு பயம் – விஜய் சேதுபதி

-

- Advertisement -
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல நடிகர் விஜய் சேதுபதி, தனக்கு டான்ஸ் என்றாலே பயம் என்று வெளிப்படையாக பேசி உள்ளார்.

தமிழ் திரையுலகில் சாதனைகள் படைத்த முன்னால் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும், டான் டான் குரு ஸ்டெப்ஸ் 2023 விருது விழா அண்மையி்ல நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

we-r-hiring
இவ்விழாவில் பங்கேற்று பேசிய விஜய் சேதுபதி, நடனம் என்றாலே எனக்கு பயம். என்னுடன் பணியாற்றிய அனைத்து மாஸ்டர்களுக்கும் அது தெரியும். சினிமாவில் கொடுக்கப்படும் குறைவான நேரத்தில் ஆச்சர்யப்படும் படியாக ரசிக்கும் வகையில், நடனத்தை அமைக்கும் உங்களை திறமை போற்றப்பட வேண்டியது. பழைய காலப்பாடல்களை பார்க்கும்போது, அதில் வரும் நடனம் எப்போதும் ஆச்சரியமாக இருக்கும். சில பாடல்களை ஒரே நாளில் எடுத்ததாக சொல்வார்கள். அது மிகப்பெரிய ஆச்சரியம் என்றார்.

நடன இயக்குநர் ஸ்ரீதர், தன் மகள் அக்‌ஷதாவுடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜவான். அவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வரும்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.

MUST READ