spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய இளம் நாயகன்... நேரில் சந்திப்பேன் என உறுதி...

மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய இளம் நாயகன்… நேரில் சந்திப்பேன் என உறுதி…

-

- Advertisement -
தேர்வுக்கு தயார் ஆகாமல் முத்தம் கொடுத்து மாணவிகள் வீடியோ வெளியிட்ட நிலையில், அவர்களுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அறிவுறுத்தியுள்ளார்.

சினிமா பின்னனி இல்லாமல், யூ டியூப் மூலம் அறிமுகமாகி சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவர் தெலுங்கில் அறிமுகமாகி 2 படங்கள் நடித்தும் வரவேற்பு இல்லை. இதைத் தொடர்ந்து பெல்லி சோப்புலு என்ற படத்தில் நடித்தார். இது அவரது மூன்றாவது திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அடுத்து விஜய் தேவரகொண்டா நடித்த திரைப்படம் தான் அர்ஜூன் ரெட்டி. இப்படம் இந்தியா முழுவதும் ஹிட் அடிக்க, பான் இந்தியா நடிகராக உருவெடுத்தார் விஜய் தேவரகொண்டா.

இறுதியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி. இத்திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் ஹிட் அடித்தது. விஜய் தேவரகொண்டா அடுத்ததாக ‘ஜெர்ஸி’ படத்தின் இயக்குனர் கெளதம் தின்னுரி இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு, ‘VD 12’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி பேமிலி ஸ்டார் என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் மிர்ணாள் தாகூர் நாயகியாக நடிக்கிறார்.
we-r-hiring

இந்நிலையில், இரண்டு பள்ளி மாணவிகள் தேர்வுக்கு படிக்காமல் விஜய் தேவரகொண்டாவின் கவனத்தை ஈர்க்க, அவர் தங்களுக்கு ரிப்ளை செய்தால் தான் படிப்போம் என ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொண்டு வீடியோ வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா, இருவரும் படித்து 90 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தால், நிச்சயம் நேரில் சந்திப்பேன் என அறிவுறுத்தியிருக்கிறார்.

MUST READ