spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழ்நாடு கிரிக்கெட் அணியில் நடிகரின் வாரிசு

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் நடிகரின் வாரிசு

-

- Advertisement -
பிரபல நடிகர் விக்ராந்தின் மகன், தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் பரீட்சையான முகங்களில் ஒன்று விக்ராந்த். இவர் பார்ப்பதற்கு விஜய் போலவும், விஷால் போலவும் இருப்பதாக இவரது ஆரம்ப கால சினிமா கட்டத்தில் பேசப்பட்டது. நடிகர் விக்ராந்த், விஜய்யின் உறவினர் ஆவார். இவர் பல குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும், 2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார். இதையடுத்து முத்துக்கு முத்தாக படத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து பாண்டிய நாடு, கவண், கெத்து உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்.

we-r-hiring
தற்போது விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியானது.

இந்நிலையில் நடிகர் விக்ராந்தின் மகன், 14 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பிரிவில் தேர்வு ஆகியுள்ளதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் விக்ராந்தும் கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ