- Advertisement -
விஜய்யின் சகோதரரும், நடிகருமான விக்ராந்தின் மனைவி அளித்த பேட்டி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் நடிகர்களில் முக்கியமான நபர் விக்ராந்த். இவர் தளபதி விஜய்யின் சகோதரரும் ஆவார். இவர் பல குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும், 2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார். இதையடுத்து முத்துக்கு முத்தாக படத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், படத்தில் அவரது நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இத்திரைப்படத்தை தொடர்ந்து விஷால் நடித்த பாண்டியநாடு, விஜய் சேதுபதி நடித்த கவண், உதயநிதி ஸ்டாலின் நடித்த கெத்து ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்திருந்தார்
