- Advertisement -
வெளிநாட்டில் ரசிகரை கண்டதும் முகத்தை மூடிக்கொண்டு விஷால் ஓடும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்லமே படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் விஷால். அதன்பின்னர் அவர் நடித்த சண்டக்கோழி திரைப்படம் விஷாலை ஆக்ஷன் ஹீரோவாக கோலிவுட் சினிமாவில் முன்னிறுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் நடித்த திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் சுமார் 100 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.
தற்போது விஷால் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரத்னம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கௌதம் மேனன், சமுத்திரக்கனி, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
டேய் விஷால் யாருடா அது…? 🙄 pic.twitter.com/Oeu1QVgOm7
— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) December 26, 2023
