- Advertisement -
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு பாலிவுட்டின் நட்சத்திர தம்பதி அலியா பட் மற்றும் ரன்பீர் கபூருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 22-ம் தேதி குமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கு, பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில், சந்தேகமே இல்லை. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
