- Advertisement -
பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, தனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இதுவரை ஆசை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவர் ஆண்ட்ரியா. கண்டநாள் முதல் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம ஆனார். தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவர், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன், அவள், வட சென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருக்கிறார். விஜய், அஜித், கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து அவர் நடித்துள்ளார்.
