- Advertisement -
தமிழில் அதிக அளவில் சாதிக்க வேண்டும் என்பதே தனது முதல் விருப்பம் என இளம் நாயகி பவ்யா திரிகா தெரிவித்துள்ளார்.

தமிழில் கதிர் படத்தின் மூலம் தடம் பதித்த பவ்யா, அடுத்தடுத்து ஜின், 13, மற்றும் ஜோ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். சமந்தாவைப் போல திரைத்துரையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் இவரது கனவாக உள்ளது. சென்னையில் வசிக்கிறார் என்றாலும், குடும்பத்தார் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பவ்யா நடிப்பில் அதிக ஆர்வம கொண்டவர். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் மின்னலக்க சந்தைப்படுத்துதல் துறையில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்த அவர் அடுத்து நடிகையாக திரையில் தடம் பதித்தார்.


நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சமந்தா எந்த பின்புலமும் இல்லாமல் திரை உலகிற்கு வந்தவர். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெற்ற நாயகி. அவர் இத்தனை நாள்கள் திரை உலகில் தாக்கு பிடித்து நிற்பதே பெரிய சாதனை என்பேன் என்று சொல்லும் பவ்யாவிற்கு சிறுவயது முதலே நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். குடும்பத்தாா் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், இவரது தந்தை மட்டும் மகளின் முடிவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.



