- Advertisement -
கோலிவுட்டின் முக்கிய இயக்குரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் லால் சலாம். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ரஜினிகாந்த், கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் ஆகியோரும் இதில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் 9-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இத்திரைப்படத்தில் பிரபல நடிகை தன்யா பாலகிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் படத்தில் நடித்திருப்பது டீசர் வெளியானபோது கூட தெரியவர வில்லை. ஆனால், அண்மையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தன்யா பங்கேற்றிருந்தார். அப்போது தான் அவர் படத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர் ஆர்.சி.பி கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக பேசி, சென்னை அணியை சாடிய பதிவு இணையத்தில் வைரலானது. மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக தன்யா பேட்டியளித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது.




