spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணமா?

பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணமா?

-

- Advertisement -

பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் மரணமா?

நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா(40) மாரடைப்பு காரணமாக காலமானதாக வெளியான தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

Image

மாண்டியா தொகுதி காங்கிரஸ் எம்.பியான திவ்யா, கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவின் பேத்தியாவார். பெங்களூரில் பிறந்த கன்னட நடிகையான திவ்யா ஸ்பந்தனா, தமிழில் வாரணம் ஆயிரம், பொல்லாதவன், குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருடன் இணைந்து 2003ம் ஆண்டி அபி என்ற படத்தின் மூலம் நடிகையான திவ்யா, கன்னடா, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, 2012- ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டுகளில் மண்டியா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற திவ்யா, 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

we-r-hiring

இந்நிலையில் திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது வதந்தி என்றும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரே கூறியுள்ளார். ஜெனீவாவில் இருப்பதாக கூறியுள்ளார் குத்து ரம்யா.

MUST READ