நடிகை இவானா புதிய படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆகியுள்ளார்.
நடிகை இவானா தற்போது தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். படத்தில் அவர் கதாபாத்திரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

அந்த படத்தை அடுத்து அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கொண்டாட்ட மழை தான். லவ் டுடே வெற்றியால் இவானாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் இவானா புதிய படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் மருமகன் ஆஷிஷ் ரெட்டி கதாநாயகனாக நடிக்கும் செல்பிஷ் என்ற படத்தில் இவானா கதாநாயகியாக நடிக்கிறார் இந்த படத்தை காசி விஷால் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் இவ்வானா தெலுங்கில் அறிமுகம் ஆகிறார்.
இதற்கிடையில் இவானா தமிழில் ‘கள்வன்’, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தோனி தயாரிப்பில் உருவாகும் ‘எல்ஜிஎம்’, ‘காம்ப்ளக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


