Homeசெய்திகள்சினிமாதனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்..... லேட்டஸ்ட் அப்டேட்!

தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்..... லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். அதே சமயம் இவர் திரைத்துறையில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாடல் ஆசிரியராகவும் பாடகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடைசியாக ராயன் எனும் திரைப்படம் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்தது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தின் இயக்கி முடித்துள்ளார் தனுஷ். தற்போது தனுஷ் நான்காவதாக இயக்கி வரும் படம் இட்லி கடை. இந்த படத்தில் அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்..... லேட்டஸ்ட் அப்டேட்! இந்நிலையில் தனுஷ் இயக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. அத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் தனுஷுடன் இணைந்து தொடரி திரைப்படத்தின் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ