- Advertisement -
ராம நாமம் பாடுங்கள் என வீடியோ வெளியிட்டதற்கு பாடகி சித்ராவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், நடிகை குஷ்பு அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 22-ம் தேதி குமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த கோயிலுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி கட்டுமானத்தை தொடங்கி வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள மாபெரும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
