மாபெரும் பட்ஜெட் படத்திலிருந்து விலகிய நயன்தாரா… இவர்தான் காரணமா?…
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். முதல் படத்திலேயே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை அட்லீ இயக்கியிருந்தார்.
ஜவான் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நயன்தாராவுக்கு, பாலிவுட்டிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் தற்போது டெஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் கண்ணப்பா எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. மாபெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகை நயன்தாரா கடவுள் பார்வதி வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் சிவனாக நடிப்பதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில், நடிகர் பிரபாஸ் இத்திரைப்படத்திலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இத்திரைப்படத்தில் சிவனாக நடிக்க ஒப்பந்தமாகினார். அதனால், நடிகை நயன்தாராவும் இத்திரைப்படத்திலிருந்து விலகினார். அக்ஷய் குமார் வருகையால் நடிகை நயன்தாராவுக்கு பதிலாக, காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், விலகியது குறித்து இதுவரை நயன்தாரா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை