- Advertisement -
தங்கலான் திரைப்படம் குறித்து பிரபல மலையாள நடிகை பார்வதி பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குநர் பா ரஞ்சித். தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் காட்ட முயலும் முக்கிய இயக்குநர் அவராவார். அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த பா ரஞ்சித், முதல் படத்திலேயே வெற்றி கண்டார். இதை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். ஒரு மதில் சுவரும், அதை சுற்றி நடக்கும் அரசியலையும் அசராமல் திரையில் காட்டி ரசிகர்களை அசரடித்தார். இதையடுத்து, ரஜினியை வைத்து காலா மற்றும் கபாலி ஆகிய பிளாக் பஸ்டர் திரைப்படங்களை எடுத்தார். இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் பா ரஞ்சித் கவனம் செலுத்தி வருகிறார்.
