- Advertisement -
ரகுல் ப்ரீத் சிங் அறிமுகமான திரைப்படம் இந்தியில் என்றாலும், அவர் தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். தமிழில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக என்னமோ ஏதோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். எச்.வினோத் இயக்கிய தீரன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றி ரகுல் ப்ரித் சிங்கிற்கு பட வாய்ப்புகள் அள்ளிக் கொடுத்தன. தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக ரகுல் நடிப்பில் தமிழில் அயலான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஜாக்கி பாக்னானி என்ற நடிகரை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரின் திருமணமும் கோவாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். பலரும் அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.




