விரைவில் பிரிகிறோம்… புஷ்பா 2 படம் குறித்து உருகிய ஸ்ரீவள்ளி…
- Advertisement -
புஷ்பா இரண்டாம் பாகம் குறித்தும், அதில் ஸ்ரீவள்ளியின் கதாபாத்திரம் குறித்தும் நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியிருக்கிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் வெளியான இந்த படம் தெலுங்கு , கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

‘புஷ்பா தி ரூல்‘ படத்திலும் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்த பகத் பாஸில் வில்லனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த அதே நபர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். கடந்த மே மாதம் ஃபகத் ஃபாசில் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் புஷ்பா இரண்டாம் பாகத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ஜப்பானில் பேட்டில் அளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, புஷ்பா இரண்டாம் பாகம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில், புஷ்பா படத்தில் நான் மனைவியாக நடித்திருக்கிறேன். கதாபாத்திரத்திற்கு கூடுதல் பொறுப்பும் சேர்ந்துள்ளது. புஷ்பா படப்பிடிப்பு தளம் என் வீடு போல மாறி விட்டது. இன்னும் சில நாட்களில் நாங்கள் பிரியப்போவதை நினைத்தால் மிகவும் கடினமாக உள்ளது என உருகி பேசினார். மேலும், புஷ்பா முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் ஒரு ஹிட் பாடல் உள்ளது எனவும், இந்தியா திரும்பியதும் அதன் படப்பிடிப்புக்கு செல்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.