Homeசெய்திகள்சினிமாத்ரிஷா, நயன்தாராவை பின்னுக்குத் தள்ளிய ராஷ்மிகா மந்தனா...

த்ரிஷா, நயன்தாராவை பின்னுக்குத் தள்ளிய ராஷ்மிகா மந்தனா…

-

- Advertisement -
தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழுக்கு வருவதற்கு முன்பாகவே, அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் அவர் பிரபலம் என்றே சொல்லலாம். சுல்தான்படத்திற்கு பிறகு, விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமன்றி இந்தியில் அனிமல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ராஷ்மிகா, பாலிவுட்டிலும் உச்ச நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

தற்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். அத்துடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் ரெயின்போ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ராகுல் ரவீந்திரன் இயக்கும் தி கேர்ள்பிரண்ட் படத்திலும் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார். தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவ்வாறு அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இந்நிலையில், பாலிவுட்டில் சல்மான் கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் ராஷ்மிகா, சுமார் 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார். அவரது திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்கவே, முன்னணி நடிகையாக வலம் வருவதால் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார். தென்னிந்தியாவில் டாப் நடிகைகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் த்ரிஷா இருவரும் சுமார் 10 கோடி முதல் 12 கோடி வரை தான் சம்பளம் வாங்குகிறார்களாம்.

MUST READ