- Advertisement -
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அமைச்சரும் நடிகையுமான ரோஜா, மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்கு சாண்டா கிளாஸ் வேடத்தில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக அவரது பிறந்தநாளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் நல்லது செய்வதை ரோஜா வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஒரு பெண்ணை மருத்துவருக்கு படிக்க வைக்க உதவினார். அவரது சொந்தத் தொகுதியான நகரியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். அந்த வகையில், விஜயவாடாவை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நாகராஜ் சாலை ஓரத்தில் செருப்புக் கடை வைத்திருக்கிறார். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி ஒரு சிறுநீரகம் செயல் இழந்து படுத்த படுக்கையாய் உள்ளார்.
