நடிகை ஷ்ருதி ஹாசன் தனது முதுகில் வேல் வடிவில் போட்டுள்ள டாட்டூ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஷ்ருதி ஹாசன் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதையடுத்து சில நாட்கள் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். தற்போது பாலைய்யா, சிரஞ்சீவி மாதிரியான சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தற்போது ஷ்ருதி ஹாசன் முதுகில் போட்டுள்ள புதிய டாட்டூ இணையத்தைக் கலக்கி வருகிறது. ஏற்கனவே தனது பெயரான ஷ்ருதி என்று முதுகின் பின்புறத்தில் டாட்டூ போட்டிருந்தார். தற்போது அதில் முருகனின் வேல் வடிவத்தை பொறித்துள்ளார். ஷ்ருதி தற்போது ஆன்மீகத்தில் அதிகம் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. முருகன் அவருக்கு பிடித்த கடவுள் என்பதால் வேல் பச்சை குத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஷ்ருதி ஹாசன் தற்போது காதலர் ஷாந்தனு உடன் பொழுதைக் கழித்து வருகிறார். இதற்கிடையில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் ‘வால்டர் வீரய்யா’ படத்திலும் அவர் நடித்து வருகிறார்.