Homeசெய்திகள்சினிமாமலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கிறது.... நடிகை திரிஷா பேச்சு!

மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கிறது…. நடிகை திரிஷா பேச்சு!

-

- Advertisement -

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்றார். மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கிறது.... நடிகை திரிஷா பேச்சு!அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார் திரிஷா. அதன்படி அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி, சூர்யா 45, தக் லைஃப், ராம், விஷ்வம்பரா என பல படங்களில் நடிக்கிறார். இதற்கிடையில் மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஐடென்டிட்டி எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் திரிஷா. இந்த படத்தில் டோவினோ தாமஸ், திரிஷா தவிர வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தினை அகில்- பால் அனாஸ் கான் இயக்கியுள்ளனர். இந்த படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமா மீது பெரிய மரியாதை இருக்கிறது.... நடிகை திரிஷா பேச்சு!இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திரிஷா, மலையாள சினிமா மீது எப்போதும் ஒரு மரியாதை இருந்து கொண்டே இருக்கும். மலையாள படங்கள் பெரும்பாலானவை புத்திசாலித்தனமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். ஒரு வருடத்தில் எப்படியாவது ஒரு மலையாள படத்தில் நடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இப்போதுதான் நடித்திருக்கிறேன்” என்று நெகழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

MUST READ