- Advertisement -
பிரபல நடிகை விஜி சந்திரசேகர் மகள்திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

தென்னிந்திய நடிகைகளில் மிகவும் பிரபலம் ஆனவர் விஜி சந்திரசேகர், தொலைக்காட்சித் தொடர்தளிலும் நடித்துள்ள இவர் நடிகை சரிதாவின் தங்கை. பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த தில்லு முல்லு திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கலியுகம், தேவி ஐ ஏ எஸ் ஆகிய தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். கிழக்கு சீமையிலே, இந்திரா, படையப்பா, சமஸ்தானம், ஆய்த எழுத்து, மதயானைக் கூட்டம் ஆகிய படங்களில் அவர் நடித்திருக்கிறார்.


விஜி சந்திரசேகருத்து இரண்டு மகள்கள் உள்ளனர். சுரக்ஷா, லவ்வின் என இரண்டு மகள்கள் உள்ளனர். இளையமகள் லவ்வின் திரைத்துறையில் நடித்து வருகிறார். இவர் அயலி என்ற இணைய தொடரில் நடித்திருப்பார். அத்தொடரில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.



