Homeசெய்திகள்சினிமாஆதி, ஹன்சிகா, யோகி பாபு கூட்டணியின் பாட்னர்.... ரிலீஸ் தேதி அப்டேட்!

ஆதி, ஹன்சிகா, யோகி பாபு கூட்டணியின் பாட்னர்…. ரிலீஸ் தேதி அப்டேட்!

-

பாட்னர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதி, ஹன்சிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் பாட்னர். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து பாண்டியராஜன், பாலக் லால்வாணி, ரோபோ சங்கர், முனீஸ் காந்த், ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். ராயல் பார்சுனா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது மனோஜ் தாமோதரன் இதனை எழுதி இயக்கியுள்ளார். சபீர் அகமது ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
இந்த படமானது காமெடி கலந்த சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டன. அதை தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கலகலப்பான டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் பாட்னர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்டு 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ