சப்தம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பாட்னர்.இப்படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில் ஆதி சப்தம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியான ஈரம் படத்தின் இயக்குனர் அறிவழகன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஆதியுடன் இணைந்து சிம்ரன், லைலா, லட்சுமிமேனன், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிக்கின்றனர். 7 ஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தமன் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. சப்தம் திரைப்படம் ஆனது ஈரம் படத்தைப் போல ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகிறது. படத்தின் டைட்டில் லுக் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, மூணாறு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது.
தற்போது இதன் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் ஆதி சமீபத்தில் இதன் டப்பிங் பணிகளை தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது படக் குழுவினருடன் இணைந்து ஆதி கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.


