Homeசெய்திகள்சினிமா'இந்த வெற்றிக்கு தல அஜித் தான் காரணம்'.....மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் ஆதிக் ரவிச்சந்திரன்!

‘இந்த வெற்றிக்கு தல அஜித் தான் காரணம்’…..மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் ஆதிக் ரவிச்சந்திரன்!

-

- Advertisement -

மார்க் ஆண்டனி வெற்றிக்கு அஜித் தான் காரணம் என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன், விஷால் , எஸ் ஜே சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. விஷாலுக்கு இது ஒரு சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது. மேலும் எஸ் ஜே சூர்யா வின் காமெடி கலந்த நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்தது மட்டுமல்லாமல் படத்திற்கு பலமளித்துள்ளது. மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசைகளும் உருவாகியுள்ள இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. தற்போது 65 கோடிக்கு மேல் வசூல் செய்து வரும் நிலையில் விரைவில் 100 கோடியை எட்டிவிடும் என்று பலரும் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத காரணத்தால் இந்த படம் அவருக்கு மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மார்க் ஆண்டனி படத்தில் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஆதிக் ரவிச்சந்திரன், எஸ் ஜே சூர்யா, விஷால் உட்பட படக்குழுவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ” இந்த இடத்தில் நான் மூன்று பேருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இவ்வளவு பெரிய படம் பண்றதுக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், என் கதை மீது நம்பிக்கை வைத்த விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய மூவருக்கும் நன்றி. எனக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றியை என் தாய் தந்தைக்கும் அதைத் தாண்டி அஜித் சாரை தான் இப்போது நினைக்கிறேன். நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித் சார் தான் உன்னால் பெரிய படம் பண்ண முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தார். அதனால் அஜித் சாருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

MUST READ